கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


சனி, மார்ச் 04, 2017

கண்ணே கலைமானே


கண்ணே கலைமானே கன்னி மயில் என
கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்கிறேன்
ஆண்டவனை இதைதான் கேட்கிறேன்
ராரிராரோ.. ஒ ராரிரோ..
ராரிராரோ.. ஒ ராரிரோ..

கண்ணே கலைமானே கன்னி மயில் என
கண்டேன் உன்னை நானே

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிபேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே கன்னி மயில் என
கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்கிறேன்
ஆண்டவனை இதைதான் கேட்கிறேன்
ராரிராரோ.. ஒ ராரிரோ..
ராரிராரோ.. ஒ ராரிரோ..

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உன்னை நான் கருத்தினில் நிறைதேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீதானே என் சந்நிதி

கண்ணே கலைமானே கன்னி மயில் என
கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்கிறேன்
ஆண்டவனை இதைதான் கேட்கிறேன்
ராரிராரோ.. ஒ ராரிரோ..
ராரிராரோ.. ஒ ராரிரோ..

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.