கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


திங்கள், டிசம்பர் 30, 2013

பாவி என்னை மறுபடியும்

நீண்ட மதிற்ச்சுவரும நெட்ட நெடுங்கோபுரமும் சூழ்ந்து மறைத்திருக்கும் சுத்தவெளி பொற்சைபையே விளக்குக்கும் விளங்காத விளக்கமில்லா சத்தியமே வெருங்கல்லாய் வீற்றிருக்கும் வினைகடந்த தத்துவமே பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே செய்த பாவமெல்லாம் தீரும் முன்னே  இறக்க வைக்காதே இறக்க வைக்காதே  பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே செய்த பாவமெல்லாம் தீரும் முன்னே  இறக்க வைக்காதே இறக்க வைக்காதே  பாவத்திற்கு கூலிதன்னை நிறுத்தி வைக்காதே பாவத்திற்கு கூலிதன்னை நிறுத்தி வைக்காதே எனைப்போல் பாவிகளை இனியேனும்  படைத்து வைக்காதே படைத்து வைக்காதே  பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே செய்த பாவமெல்லாம் தீரும் முன்னே  இறக்க வைக்காதே வஞ்சகனின் உடலெல்லாம் வாதம் வர வேண்டாமோ வாய் நிறைந்த பொய்யனுக்கு சூலம் வர வேண்டாமோ வஞ்சகனின் உடலெல்லாம் வாதம் வர வேண்டாமோ வாய் நிறைந்த பொய்யனுக்கு சூலம் வர வேண்டாமோ கால் அழுகி கை அழுகி காடு செல்ல வேண்டாமோ கால் அழுகி கை அழுகி காடு செல்ல வேண்டாமோ காதகனைக் கண்டு மக்கள் காறித்துப்ப வேண்டாமோ கோடி வகை நோய் கொடய்யா சாகும் வர அழ விடய்யா கோடி வகை நோய் கொடய்யா சாகும் வர அழ விடய்யா இப்பிறவி முடிவதற்குள் என் கணக்கை முடித்திடய்யா உச்சி மரக்கிளையில் நின்று  உயிர் வேரை அறுத்தவன் நான் உச்சி மரக்கிளையில் நின்று  உயிர் வேரை அறுத்தவன் நான் பச்சை இளங்கொளுந்தைக்கிள்ளி  பாழ் நெருப்பில் எறிந்தவன் நான் பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே !

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.