கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


வியாழன், செப்டம்பர் 01, 2011

தமிழுக்கும் அமுதென்று பேர்


பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் இன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்! தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழுக்கு மதுவென்று பேர், தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்! தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்! தமிழ் எங்கள் இளமைக்கு பால், தமிழ் எங்கள் இளமைக்கு பால் - இன்பத் தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்! புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்! சுடர் தந்த தேன்! தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்! தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! வயிரத்தின் வாள்! தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்! தமிழுக்கும் அமுதென்று பேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்

ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே


சங்கே முழங்கு , சங்கே முழங்கு , சங்கே முழங்கு

பாத்திமா வாழ்ந்த முறை...


ஈச்சமரத்து இன்பச் சோலை