கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


ஞாயிறு, ஜனவரி 02, 2011

பொன்னான வாழ்வு மண்ணாகி...


பெண்:- பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா, துயரம் நிலைதானா, உலகம் இதுதானா?, பொன்னான வாழ்வே, மண்ணாகிப் போமா, துயரம் நிலைதானா உலகம் இதுதானா?, பண்போடு முன்னாளில் அன்பாக என்னோடு வாழ்ந்தாரே, பண்போடு முன்னாளில், அன்பாக, என்னோடு வாழ்ந்தாரே, வீணான பாலாய், விரும்பாத பூவாய், என்றெண்ணி விடுத்தாரே, வீணான பாலாய், விரும்பாத பூவாய், என்றெண்ணி விடுத்தாரே, என்னன்பை மறந்தாரே, ஆண்:- பண்பாடு இல்லாமல், மண்மீதே, பாழாகி நொந்தேனே, பண்பாடு இல்லாமல், மண்மீதே, பாழாகி நொந்தேனே, தேனான வாழ்வு, திசைமாறிப் போச்சே, நிம்மதி இழந்தாச்சே,தேனான வாழ்வு, திசைமாறிப் போச்சே, நிம்மதி இழந்தாச்சே, தீராத பழியாச்சே, பொன்னான வாழ்வு, மண்ணாகிப் போமா, துயரம் நிலைதானா, உலகம் இதுதானா?, பொன்னான வாழ்வு, மண்ணாகிப் போமா, துயரம் நிலைதானா, உலகம் இதுதானா?, பெண்:- பெண்ணென்றும் பாராமல், எல்லோரும், என் மீது பழி சொல்வார், பெண்ணென்றும் பாராமல், எல்லோரும், என் மீது பழி சொல்வார், உள்ளன்பு கொண்டேன், அவர்மீது நானே, ஊராரும் அறிவாரோ?, உள்ளன்பு கொண்டேன், அவர்மீது நானே, ஊராரும் அறிவாரோ?, என் வாழ்வை, அழிப்பாரோ?, பொன்னான வாழ்வே, மண்ணாகிப் போமா, துயரம் நிலைதானா, உலகம் இதுதானா?, பொன்னான வாழ்வே, மண்ணாகிப் போமா, துயரம் நிலைதானா, உலகம் இதுதானா?, 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.