கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


சனி, ஜனவரி 26, 2013

பரதேசி - யாத்தே கால,


யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே காடும் அழுதாச்சே
ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை
தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை
யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே

தாழ் போன வீடு கால் போன ஆடு
ஒன்னோட ஒன்னா துணையானது ஏன்
தாய் போல நெஞ்சு தாளாத அன்பு
மழை தண்ணியோடு மாசு இல்லையே
வழி சொல்லவே இல்லையே வாய்மொழி
கண்ணீர் தான் ஏழையின் தாய்மொழி
எங்கோ தவிக்கும் உன் பிள்ளையே
இங்கே உறவு என் பிள்ளையே

கை கொண்ட நெல்லு உமியாகும் போது
கத்தாலை சோறும் சோறாகுமே
உண்டான சொந்தம் உடைகின்ற போது
இல்லாத சொந்தம் உறவாகுமே

ஒரு ஜீ(சீ)வனோ உறவிலே சேருதே
இரு ஜீ(சீ)வனோ ஒத்தையில் வாடுதே
கண்ணீர் துடைக்க ஆளில்லையே
காலம் நடக்கும் காலில்லையே

யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே காடும் அழுதாச்சே
ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை
தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை

படம் : பரதேசி (2013)
இசை : பிரகாஷ் குமார்
பாடியவர்கள் : ப்ரகதி, பிரசன்னா
வரிகள் : வைரமுத்து

போயும் போயும் மனிதனுக்கிந்த

போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே
இறைவன் புத்தியை குடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியை கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே

கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்
பாயும் புலியின் கொடுமையை இறைவன் பார்வையில் வைத்தானே
புலியின் பார்வையில் வைத்தானே
இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே
இதய போர்வையில் மறைத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே

கைகளை தோளில் போடுகிறான்
அதை கருணை என்று அவன் கூறுகிறான்
கைகளை தோளில் போடுகிறான்
அதை கருணை என்று அவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே
இறைவன் புத்தியை குடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியை கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே

படம் : தாய் சொல்லை தட்டாதே (1961)
இசை : மகாதேவன் 
பாடியவர் : செளந்தர்ராஜன் 
வரிகள் : கண்ணதாசன்