கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


வியாழன், செப்டம்பர் 01, 2011

தமிழுக்கும் அமுதென்று பேர்


பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் இன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்! தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழுக்கு மதுவென்று பேர், தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்! தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்! தமிழ் எங்கள் இளமைக்கு பால், தமிழ் எங்கள் இளமைக்கு பால் - இன்பத் தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்! புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்! சுடர் தந்த தேன்! தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்! தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! வயிரத்தின் வாள்! தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்! தமிழுக்கும் அமுதென்று பேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்

ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே


சங்கே முழங்கு , சங்கே முழங்கு , சங்கே முழங்கு

பாத்திமா வாழ்ந்த முறை...


ஈச்சமரத்து இன்பச் சோலை


திங்கள், ஜூலை 25, 2011

காக்கை சிறகினிலே


வீணையடி நீ எனக்கு



பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு,
வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு; (2)

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு

வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு
பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞானஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! நல்லழகே!
ஊனமறு நல்லழகே ஊறுசுவையே கண்ணம்மா

காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு
வேதமடி நீ யெனக்கு வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடிவானவளே ! நாதவடிவானவளே !
நல்ல உயிரே கண்ணம்மா !

ஞாயிறு, ஜூலை 24, 2011

காசேதான் கடவுளப்பா


காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா - அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா
காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா

கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே
கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ? - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ?

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா

அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
வரவுக்கு மேலே செலவுகள் செய்தால்
அவனும் குருடனும் ஒன்றாகும்
களவுக்குப் போகும் பொருளை எடுத்து
வறுமைக்குத் தந்தால் தருமமடா
களவுக்குப் போகும் பொருளை எடுத்து
வறுமைக்குத் தந்தால் தருமமடா
பூட்டுக்கு மேலே பூட்டைப் போட்டு
பூட்டி வைத்தால் அது கருமமடா

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா

கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே
கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிபபதும்
பணத்தால் வந்த நிலை தானே
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிபபதும்
பணத்தால் வந்த நிலை தானே
கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால்
கூட்டமிருக்கும் பின்னோடு
தலைகளை ஆட்டும் பொம்மைகளெல்லாம்
தாளங்கள் போடும் பின்னோடு

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ? - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ?
காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா

தீர்த்த கரையினிலே


திங்கள், மே 09, 2011

சனி, ஏப்ரல் 30, 2011

வாழ்த்துக்கள் 1



    கலைக்கழகம்

ஞாயிறு, பிப்ரவரி 06, 2011

துலாபராம்



காலத்தில் அழியாத மாபெரும்


மாலைப்பொழுதின் மயக்கத்தில்....




தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்.

முத்துராமண் நடித்த படப்பாடல்கள்

வாணி ஜெயராம் படித்த

பழைய பாடல்கள்பாட்டு சிக்குதடி பல்லவி திக்குதடி


நான் என்ன சொல்லி விட்டே


நினைக் தெரிந்த மலரே


எம்.ஜி.ஆர் நடித்த படப்பாடல்..........





ஒரு காதல் என்பது

ஞாயிறு, ஜனவரி 02, 2011

பொன்னான வாழ்வு மண்ணாகி...


பெண்:- பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா, துயரம் நிலைதானா, உலகம் இதுதானா?, பொன்னான வாழ்வே, மண்ணாகிப் போமா, துயரம் நிலைதானா உலகம் இதுதானா?, பண்போடு முன்னாளில் அன்பாக என்னோடு வாழ்ந்தாரே, பண்போடு முன்னாளில், அன்பாக, என்னோடு வாழ்ந்தாரே, வீணான பாலாய், விரும்பாத பூவாய், என்றெண்ணி விடுத்தாரே, வீணான பாலாய், விரும்பாத பூவாய், என்றெண்ணி விடுத்தாரே, என்னன்பை மறந்தாரே, ஆண்:- பண்பாடு இல்லாமல், மண்மீதே, பாழாகி நொந்தேனே, பண்பாடு இல்லாமல், மண்மீதே, பாழாகி நொந்தேனே, தேனான வாழ்வு, திசைமாறிப் போச்சே, நிம்மதி இழந்தாச்சே,தேனான வாழ்வு, திசைமாறிப் போச்சே, நிம்மதி இழந்தாச்சே, தீராத பழியாச்சே, பொன்னான வாழ்வு, மண்ணாகிப் போமா, துயரம் நிலைதானா, உலகம் இதுதானா?, பொன்னான வாழ்வு, மண்ணாகிப் போமா, துயரம் நிலைதானா, உலகம் இதுதானா?, பெண்:- பெண்ணென்றும் பாராமல், எல்லோரும், என் மீது பழி சொல்வார், பெண்ணென்றும் பாராமல், எல்லோரும், என் மீது பழி சொல்வார், உள்ளன்பு கொண்டேன், அவர்மீது நானே, ஊராரும் அறிவாரோ?, உள்ளன்பு கொண்டேன், அவர்மீது நானே, ஊராரும் அறிவாரோ?, என் வாழ்வை, அழிப்பாரோ?, பொன்னான வாழ்வே, மண்ணாகிப் போமா, துயரம் நிலைதானா, உலகம் இதுதானா?, பொன்னான வாழ்வே, மண்ணாகிப் போமா, துயரம் நிலைதானா, உலகம் இதுதானா?, 

சனி, ஜனவரி 01, 2011

காவியமா இல்லை ஓவியமா




பெண்:- காவியமா நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா, நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா.., ஆண்:- காவியமா நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா, நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா.., பெண்:- முகலாய, சாம்ராஜ்ய, தீபமே, முகலாய, சாம்ராஜ்ய, தீபமே, சிரித்த, முகத்தோடு, நினைவில், கொஞ்சும் ரூபமெ, முகலாய, சாம்ராஜ்ய, தீபமே, சிரித்த, முகத்தோடு, நினைவில், கொஞ்சும் ரூபமெ, ஆண்:- மும்தாஜ்ஜே.., ஏ.., ஏ.., ஏஏஏ.., மும்தாஜ்ஜே, முத்தே, என் தேகமே, மும்தாஜ்ஜே, முத்தே, என் தேகமே, பேசும், முழு மதியே, என், இதய கீதமே, பேசும், முழு மதியே, என், இதய கீதமே, பெண்:- என்றும் இன்பமே, பொங்கும் வண்ணமே, என்னைச் சொந்தம், கொண்ட தெய்வமே, என்றும் இன்பமே, பொங்கும் வண்ணமே, என்னைச் சொந்தம், கொண்ட தெய்வமே, ஆண்:- அன்பின் அமுதமே, அழகின் சிகரமே, ஆசை வடிவமே, உலகின் அதிசயமே, அன்பின் அமுதமே, அழகின் சிகரமே, ஆசை வடிவமே, உலகின் அதிசயமே, இருவரும்:- காவியமா நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா, பெண்:- என்னாளும், அழியாத நிலையிலே, காதல், ஒன்றையே தான், நாடும், இந்த உலகிலே, என்னாளும், அழியாத நிலையிலே, காதல், ஒன்றையே தான், நாடும், இந்த உலகிலே, ஆண்:- கண்முன்னே, தோன்றும், அந்தக் கனவிலே.., கண்முன்னே, தோன்றும், அந்தக் கனவிலே.., உள்ளம் கலந்திடுதே, ஆனந்த உணர்விலே, உள்ளம் கலந்திடுதே, ஆனந்த உணர்விலே, பெண்:- கனியில் ஊறிடும், சுவையை மீறிடும், இனிமை, தருவதுண்மைக் காதலே, கனியில் ஊறிடும், சுவையை மீறிடும், இனிமை, தருவதுண்மைக் காதலே, ஆண்:- காலம் மாறினும், தேகம் அழியினும், கதையில், கவிதையில், கலந்தே வாழுவோம், காலம் மாறினும், தேகம் அழியினும், கதையில், கவிதையில், கலந்தே வாழுவோம், இருவரும்:- காவியமா நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா, நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா..,

பூச்சிட்டு கண்ணங்கள் -துலாபாரம்

சின்ன கண்ணமா பாடல்கள்