கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 13, 2010

காலமிது காலமிது கண்ணுறங்கு

பொன்மேனி தழுவாமல்

அடி ஆத்தாடி நீ போகும் பாதை

படம்: கடலோரக்கவிதைகள்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்

அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே
அடி அம்மாடி...
நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே

விழி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது
அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே....
அடி ஆத்தாடி....

சொந்தம் என்ன சொந்தம் என்று
சொல்லவில்லை அப்போது

பக்கம் வந்து பார்த்துச் சொல்ல
இறக்கை இல்லை இப்போது
காதல் வந்து சேர்ந்த போது..
வார்த்தை வந்து சேரவில்லை
வார்த்தை வந்து சேர்ந்த போது
வாழ்க்கை ஒண்ணு சேரவில்லை
பூசைக்காகப் போன பூவு
பூக்கடைக்கு வாராது...
கற்றுத் தந்த கண்ணே
உன்னைக் குற்றம் சொல்லக் கூடாது...
மனம் தாங்காது..... ஓஓஒ...

அடி அம்மாடி...
நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே!
அடி ஆத்தாடி நீ போகும் பாதை
எங்கே பொன்மானே!

கண்ணே! இது ஊமைக்காதல்
காத்திருந்து நொந்தேனே!
தண்டனைக்குப் பின்னே நீயும்
சாட்சி சொல்ல வந்தாயே!
காத்திருந்து ஆனதென்ன
கண்ணீர் வற்றிப் போனதென்ன
தேர் முறிஞ்சு போனபின்னே...
தெய்வம் வந்து லாபமென்ன
என்ன சொல்லி என்ன பெண்ணே!
என்னைச்சுற்றி வேதாந்தம்
பாறாங்கல்லில் முட்டிக்கொண்டு
முட்டைக்கென்ன வேதாந்தம்
இனி பூகம்பம்... ஓஓஓ...

அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே
அடி அம்மாடி...
நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே..
விழி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது

அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே....
அடி ஆத்தாடி.... 

ராஜாத்தி காத்திருந்தா

செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே

படம்: பெண்மணி அவள் கண்மணி
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள்.. பாருங்கள்
மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள்.. பாருங்கள்
...

மாம்பூக்களே மைனாக்களே.. சந்தோஷ வேளைதான்.. சங்கீதம் பாடுங்கள்
நாணல்களே நாரைகளே.. கல்யாணப் பெண்ணிவள்.. நல்வாழ்த்துக் கூறுங்கள்
காலகாலமாய்த் தப்பாத தாளமாய்
காதல் வண்ணமே மங்காத கோலமாய்
பெண்ணென்ற காவியம் பல்லாண்டு வாழணும்

மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள்.. பாருங்கள்
மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
...

கார்காலமே நீர்த் தூவுமே.. செந்தாழம் பூவுடல் சில்லென்று கூசுமே 
ஆண் பாதியும் பெண் பாதியும் ஒன்றாகும் வேளையில் சம்சார கானமே
ஓடம் போலவே உள்ளங்களாடவே.. ஏரி போலவே வெள்ளங்கள் ஊறவே
ஒன்றான ஜாதகம் பல்லாண்டு வாழணும்

மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள்.. பாருங்கள்
மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்.. வாருங்கள்
...

ஆடல் கலையே

ஒரு நாள் யாரோரு